Our Feeds


Thursday, June 26, 2025

Sri Lanka

ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் பலி, 7 பேர் காயம் - உத்தராகண்ட்


உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் இன்று ஆற்றில் பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் படுகாயமடைந்தனர்.

ருத்ரபிரயாக் மாவட்டத்தின் அலக்நந்தா ஆற்றில் 18 இருக்கைகள் கொண்ட பேருந்து கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார், 7 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திலிருந்து இதுவரை ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை குழுக்கள் விபத்து நடந்த இடத்தில் எஞ்சியோரஒ தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளைத் தொடர்கின்றன.

காவல்துறை தலைமையக செய்தித் தொடர்பாளர் ஐஜி நிலேஷ் ஆனந்த் பரானே வெளியிட்ட அறிக்கையில், ‘பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கோல்திர் பகுதியில் உள்ள அலக்நந்தா ஆற்றில் கவிழ்ந்தது. பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீட்பு நடவடிக்கைக்காக மாநில பேரிடர் மீட்புப் படை, காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர்’ என்று அவர் தெரிவித்தார்

விபத்து நடந்த இடத்தில் மீட்புக் குழுக்கள் தீவிரமான மீட்புப் பணியில் இறங்கியுள்ளன. இருப்பினும் ஆற்றின் வேகமான நீரோட்டம் மற்றும் கரடுமுரடான நிலப்பரப்பு காரணமாக மீட்புப்பணியில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »