இஸ்ரேலின் பீர்செவாவில் ஈரான் மேற்கொண்ட
ஏவுகணை தாக்குதல் காரணமாக மைக்ரோசொவ்ட் அலுவலகத்திற்கு அருகில் தீமூண்டுள்ளது.இஸ்ரேலின் தென்பகுதி நகரின் பல வீதிகளில் தீ பரவியுள்ள காணொளிகளை இஸ்ரேலின் அவசரசேவை பிரிவு வெளியிட்டுள்ளது.
இதேவேளை இஸ்ரேலின் தென்பகுதி மாவட்டத்தின் திறந்தவெளிகளில் ஏவுகணைகளின் வெடிபொருட்கள் விழுந்ததால் சொத்துக்களிற்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன, என இஸ்ரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பீர் செவா நெவாவின் பாலைவனப்பகுதியில் இஸ்ரேலின் விமானபடைத் தளம் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.