தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பாக கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவான உலுவடுகே சந்தமாலியை பார்வையிட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (18) கொழும்பு தேசிய வைத்தியசாலைக்குச் சென்றார்.
கடந்த திங்கட்கிழமை (16) கொழும்பு மாநகர சபையின் மேயரைத் தேர்ந்தெடுப்பதற்கான தொடக்க அமர்வில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது சந்தமாலி அடையாளம் தெரியாத ஒரு குழுவினரால் தாக்கப்பட்டார்.
தாக்குதலில் காயமடைந்த பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.