இஸ்ரேலில் தங்கியுள்ள வெளிநாட்டினரின் காலாவதியான விசாக்களை மூன்று மாதங்களுக்கு நீடிக்க இஸ்ரேலின் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலைவாய்ப்பு, சுற்றுலா, தன்னார்வலர், விவசாய பயிற்சியாளர்கள், மாணவர், மதகுருமார்கள் மற்றும் தற்காலிக வதிவிட விசாக்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் இஸ்ரேலில் உள்ள தனிநபர்களின் காலாவதியான விசாக்கள் மீண்டும் செயல்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டாரா தெரிவித்தார்.
ஈரான் தாக்குதலில் காயமடைந்த நான்கு இலங்கையர்களில் இருவர் இன்னும் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் தினமும் கண்காணிக்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதேவேளை வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் தூதரகம் செயல்படும் என்றும் அவர் கூறினார் .