Our Feeds


Tuesday, June 24, 2025

Sri Lanka

பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று கனடா பயணம்!



உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர், பிரதமர் டொக்டர் ஹரிணி அமரசூரிய இன்று (24) காலை கனடாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.

பொதுநலவாய கற்கைகள் நிர்வாக சபையில் பங்கேற்க கனடாவுக்குப் புறப்பட்டுள்ளார்.

பொதுநலவாய கற்கைகள் நிர்வாக சபை ஜூன் 24 முதல் 26 வரை கனடாவின் வான்கூவரில் நடைபெறும்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் கல்வி மற்றும் பயிற்சி, உயர்கல்வி, ஆசிரியர் கல்வி, வாழ்நாள் முழுவதும் கற்றல் மற்றும் செயலில் கற்றலுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் பங்களிப்பு ஆகிய துறைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்படும்.

புதுமை மற்றும் ஆராய்ச்சியில் முதலீடு, நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் டிஜிட்டல் மாற்றத்தை ஆதரித்தல், பாலின சமத்துவத்தை ஊக்குவித்தல் மற்றும் கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துதல் ஆகியவையும் இங்கு விவாதிக்கப்பட உள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »