முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் முதுநபீன் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உத்தியோகபூர்வமாக இணைந்து கொள்ளும் நிகழ்வு இன்று (25) சாய்ந்தமருதில் இடம்பெற்றது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை உள்ளிட்ட கட்சியின் அம்பாறை மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாளை மறுதினம், 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பொத்துவில் பிரதேச சபை தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ளது. இதில் முஷாரப் தவிசாளராக வேண்டும் என்ற நோக்கிலேயே இந்த இணைவு இடம்பெற்றது.
கடந்த தேர்தல் காலங்களில் கட்சியையும், கட்சியின் சார்பாக களமிறங்கிய வேட்பாளர்களையும், கட்சியின் தலைமையையும் மிக மோசமான முறையில் விமர்சித்து வந்த முஷாரப்புடன் நாங்கள் ஒருபோதும் இணைந்து செயற்பட மாட்டோம் என்று முஸ்லிம் காங்கிரஸில் தெரிவாகிய 5 உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாது தங்களின் எதிர்ப்பினை தெரிவித்துள்ளனர்.
இந்நிலைமையை அறிந்தும் அறியாத மு.காவின் தலைவர் ரவூப் ஹக்கீம், பொத்துவில் பிரதேச சபைக்கு தெரிவாகிய முஸ்லிம் காங்கிரஸினுடைய 5 உறுப்பினர்களையும் பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அப்துல் வாஸித் மற்றும் மத்திய குழு உறுப்பினர்களையும் இன்றைய கூட்டத்திற்கு கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்ற அழைத்திருந்த போதிலும் அனைவரும் இக்கூட்டத்தை புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Wednesday, June 25, 2025
மு.காவில் இணைந்தார் முஷாரப் - எதிர்ப்பு தெரிவித்து நிகழ்வை புறக்கணித்த உறுப்பினர்கள்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »