மருத்துவ ஆய்வுகூட தொழிநுட்ப நிபுணர் ரவி குமுதேஷ்
பணிஇடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.நிறுவன விதிகளை மீறி, கடந்த 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட்டதற்காக பணிஇடைநீக்கம் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) சாமிக கமகே ஒரு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளா
இந்த இடைநீக்கமானது கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதிமுதல் அமுலுக்கு வந்துள்ளது.
அதன்படி, அவருக்கு எந்த சம்பளம் அல்லது கொடுப்பனவுகளும் வழங்கப்படமாட்டது என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், குறித்த இடைநீக்க காலத்தில், அவர் வெளிநாடு செல்ல முடியாது எனவும் அவரது வசிப்பிடம் அல்லது முகவரியில் மாற்றம் ஏற்பட்டால், அவருக்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சின் கூடுதல் செயலாளர் (நிர்வாகம்) சாமிக கமகே கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.