Our Feeds


Friday, June 27, 2025

Sri Lanka

அமெரிக்காவுடன் எந்த அணுசக்தி பேசுவார்த்தையும் கிடையாது - ஈரான் தெரிவிப்பு!


அணு ஆயுதங்கள் பற்றி அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை என ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. அடுத்த வாரம் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் கூற்றை ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்ச்சி மறுத்துள்ளார்.

அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது தங்கள் நலன்களுக்கு உதவுமா என்பதை ஈரான் இன்னும் ஆராய்ந்து வருவதாகவும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல், ஈரான் அணுசக்தி வசதிகள் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு, ஐந்து சுற்றுப் பேச்சுவார்த்தைகள் தடைபட்ட நிலையில் இந்த மதிப்பீடு நடைபெற்று வருவதாகவும் அரக்ச்சி தெரிவித்தார்.

ஈரான் அணுசக்தி திட்டம் முழுக்க முழுக்க சிவில் நோக்கங்களுக்காகவே என்றும் அவர் மீண்டும் தெரிவித்தார்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்கள் கணிசமான சேதத்தை ஏற்படுத்தியதை அரக்ச்சி ஒப்புக்கொண்டார்.

இத்தாக்குதல்கள் ஈரானின் அணு ஆயுத திறனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்டதாக அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறுகின்றன.

புதன்கிழமை நேட்டோ உச்சிமாநாட்டில் பேசிய டிரம்ப் , அமெரிக்கா மற்றும் ஈரான் அடுத்த வாரம் சந்திக்கும் என்று தெரிவித்திருந்தார். மேலும் ஈரான் அணுசக்தி தளங்கள் மீதான பென்டகன் தாக்குதல்கள் வெற்றி பெற்றதாகவும் கூறியிருந்தார்.

அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ, ஈரான் அணு ஆயுதங்களை பெறுவதைத் தடுக்க அமெரிக்கா முயன்று வருவதாகவும், ஆட்சி மாற்றம் என்பது ஒரு சாத்தியமான விளைவு என்றும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »