மன்னார் மற்றும் கொக்குத்தொடுவாய் மனிதபுதைக்குழிகள் கைவிடப்பட்டதைப் போன்று, செம்மணி விடயங்களை மூடி மறைக்க, ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை என இலங்கைத் தமிழரசு கட்சியின் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயத்தில் மனிதப் புதைகுழிகள் மிக முக்கிய பங்கை வகிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விடயம் தொடர்பிலான, உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமாயின், குறித்த மனிதப் புதைகுழிகளை, சரியான முறையில் ஆய்வு செய்ய வேண்டும் என எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
செம்மணி மனிதப் புதைகுழியும், வடக்கு கிழக்கில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள ஏனைய மனிதப் புதைகுழிகளும், சர்வதேச நிபுணர்களின் மேற்பார்வையுடன், சரியான முறையில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும் என அவர் கோரியுள்ளார்.