Our Feeds


Monday, June 16, 2025

Admin

உள்ளூராட்சி சபைகளில் தேசிய மக்கள் சக்தியுடன் இணையும் இ.தொ.கா!


நுவரெலியா மாவட்டம் உட்பட மலையக மாவட்டங்களில் சேவல் சின்னத்தில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தேசிய சபை இன்று (16) கொட்டகலையில் உள்ள காங்கிரஸ் தொழில்நுட்ப வளாகத்தில் கூடியது. இக்கூட்டத்திற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய சபை உறுப்பினர்களுடன் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்னிலை பெற்ற சபைகள் உட்பட நுவரெலிய மாவட்டத்தின் உள்ளுராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் முன்னிலை பெற்ற கட்சி உறுப்பினர்களின் தொகை அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகத்தை அமைத்துக் கொள்வதே பொருத்தமானது என்ற கருத்தின் அடிப்படையில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »