இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதாக
குற்றம்சாட்டி, கடந்த 13-ந்தேதி ஈரான் மீது இ்ஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தி மையங்களையும், ராணுவ நிலைகளையும் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. ஈரானும் பதிலடியாக தாக்குதலில் ஈடுபட்டது.இன்று 7-வது நாளாக இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் நீடித்து வருகிறது.இந்தநிலையில், இஸ்ரேல் மீது செஜ்ஜில் வகை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்த போவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் தயாரித்த இந்த ஏவுகணை 2 ஆயிரம் கிலோ மீட்டர் வரை சென்று தாக்க கூடியது என்று கூறப்படுகிறது
செஜ்ஜில் வகை ஏவுகணையின் வேகம் இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலானது என கூறப்படுகிறது.
செஜ்ஜில் வகை ஏவுகணை அதிவேகமாக இலக்கை அடையும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. செஜ்ஜில் வகை ஏவுகணையின் வேகம் இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகளுக்கு சவாலானது என கூறப்படுகிறது. செஜ்ஜில் வகை ஏவுகணைகளை இஸ்ரேல் வான்பாதுகாப்பு அமைப்புகளால் தடுக்க முடியாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் - இரான் சண்டையில் செஜ்ஜில் ஏவுகணையின் பயன்பாடு மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. செஜ்ஜில் ஏவுகணையானது 18 மீட்டர் உயரம் கொண்டது. இது கிட்டத்தட்ட 700 கிலோ கிராம் எடையுடன் சென்று இலக்கைத் தாக்கி அழிக்கவல்லது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.