அணுசக்தி நிலையங்கள் மீதான எந்தவொரு தாக்குதலும் சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்று சவுதி அணுசக்தி மற்றும் கதிரியக்க ஒழுங்குமுறை ஆணையகம் கூறியுள்ளது.
எந்தவொரு தரப்பினராலும் நடத்தப்படும் எந்தவொரு ஆயுதத் தாக்குதலும், அல்லது அமைதியான நோக்கங்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட அணுசக்தி நிலையங்களை குறிவைக்கும் எந்தவொரு அச்சுறுத்தலும், சர்வதேச தீர்மானங்கள், ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தின் கொள்கைகள், சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பின் சட்டத்தை மீறுவதாகும் என்று சவுதி அணுசக்தி மற்றும் கதிரியக்க ஒழுங்குமுறை ஆணையகம் கூறியுள்ளது.
இதேவேளை பாரசீக வளைகுடாவிற்கு அப்பால் உள்ள ஈரானின் அணுசக்தி நிலையங்களை இஸ்ரேல் அல்லது அமெரிக்கா தாக்கினால் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து வளைகுடா அரபு நாடுகள் கவலை தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .