பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷன சூரியபெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துள்ளார்.
இந்த இராஜிநாமா ஜூன் 20 முதல் அமுலுக்கு வரும் என்று பாராளுமன்ற செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
புதிய பாராளுமன்றத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்ட ஹர்ஷன சூரியப்பெரும, நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக பணியாற்றினார்.
அதன்படி, பிரதி அமைச்சரின் இராஜிநாமாவை பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஏற்றுக்கொண்டுள்ளார், மேலும் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்ப தேர்தல் ஆணையத்திற்கு அறிவிக்க செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர நடவடிக்கை எடுத்துள்ளார்.
நிதி அமைச்சின் செயலாளராக பணியாற்றிய மஹிந்த சிறிவர்தன இந்த மாத இறுதியில் அந்தப் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதால் அப்பதவிக்கு ஹர்ஷன சூரியப்பெரும நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
Friday, June 20, 2025
ஹர்ஷன சூரியபெரும இராஜிநாமா!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »