ஈரான் யுத்தநிறுத்தத்தை மீறியதாக குற்றம்சாட்டியுள்ள இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கடுமையான பதிலடியை கொடுக்குமாறு இஸ்ரேலிய இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதுவரைகள் உயிரிழப்புகள் காயங்கள் குறித்த எந்த அவசரவேண்டுகோளும் தங்களிற்கு வரவில்லை என இஸ்ரேலின் அவசரசேவை தெரிவித்துள்ளது.