கணேமுல்ல சஞ்ஜீவவின் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியோடியதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) இந்த கொலை தொடர்பாக முறையான மற்றும் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நேற்று (23) இரவு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆனந்த விஜயபால, "எங்களுக்கு கிடைத்த தகவல்களின்படி, இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பியோடியதாக எந்த ஆதாரமும் இதுவரை கிடைக்கவில்லை. இந்த வழக்கு தொடர்பாக முழுமையாக பார்க்கும்போது, இந்த சந்தேக நபரிடம் இருந்த அனைத்து தகவல்களும் மற்ற சந்தேக நபர்கள் மூலம் ஏற்கனவே கண்டறியப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.
Tuesday, June 24, 2025
இஷாரா செவ்வந்திக்கு நடந்தது என்ன?
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »