Our Feeds


Saturday, June 14, 2025

SHAHNI RAMEES

காய்ச்சல், சளி, இருமல் இருந்தால் பாடசாலைக்கு அனுப்ப வேண்டாம்! - டொக்டர் தீபால்

 

குழந்தைகளுக்கு காய்ச்சல், சளி, இருமல் இருக்குமானால் பாடசாலை அனுப்புவதை தவிர்த்துக் கொள்ளுமாறு லேடி ரிட்ஜ்வே குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

 

டெங்கு, சிக்குன்குனியா அல்லது இன்ஃப்ளூயன்ஸா உள்ள குழந்தைகள் பாடசாலை மற்றும் பாலர் பாடசாலைக்குச் சென்றால், அவர்கள் ஓடி குதித்து விளையாடும் போது மாரடைப்பு மற்றும் உயிருக்கு ஆபத்தான நிலைமைகளை கூட ஏற்படலாமென அவர் கூறினார்.

 

டெங்கு அல்லது சிக்குன்குனியா குழந்தைகளுக்கு இருப்பது சந்தேகிக்கப்பட்டால் இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குழந்தைகளுக்கு கொசு வலைகளைப் பயன்படுத்துவது முக்கியம் மேலும் இது மற்றவர்களுக்கு தொற்றுவதை தடுக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

 

குறித்த நோய்களார் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இயற்கையான திரவ உணவை வழங்குவது மிகவும் முக்கியமெனவும் டெங்கு நோயாளிகளுக்கு சிவப்பு மற்றும் கருப்பு நிற உணவை வழங்க வேண்டாமென்று அறிவுறுத்தியுள்ளார்.

 

டெங்குவால் பாதிக்கப்பட்டிருக்கும்போது அவர்கள் கடினமாக உழைத்தால், பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம், மேலும் அவர்களின் உயிர்கள் கூட இழக்கப்படலாம் என்றும் அவர் கூறினார்.

 

வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளும் அதிகமாகப் பதிவாவதாகவும், அத்தகைய குழந்தைகளுக்கு வறுத்த அரிசி கஞ்சி, உப்பு கஞ்சி, வாழைப்பழம் போன்றவற்றைக் கொடுப்பது முக்கியம் என்றும் சிறப்பு மருத்துவர் தெரிவித்துள்ளார்.

 

வயிற்றுப்போக்கு உள்ள நோயாளிகளுக்கு எண்ணெய், வெண்ணெய் மற்றும் சீஸ் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

 

மேல் மாகாணத்தில் டெங்கு மற்றும் சின்னம்மை நோயாளிகள் அதிகமாகப் பதிவாவதாக சுகாதாரத் துறைகள் தெரிவிக்கின்றன. நாடு முழுவதும் பரவி வரும் புதிய கோவிட் வகையின் தொற்று காரணமாக இதுவரை இரண்டு பேர் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »