காஸாவில் இடம்பெற்று வரும் இன அழிப்பினை
கண்டித்து கொழும்பில் அமெரிக்கத் தூதரகத்துக்கு முன்பாக இன்று வெள்ளிக்கிழமை (13) பிற்பகல் 1.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.“காஸாவில் இடம்பெற்றுவரும் இன அழிப்புக்கு எதிராக நிற்போம்” எனும் நோக்கத்தில் மாற்றத்துக்கான இளைஞர்கள் அமைப்பினால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.