ஈரான் தனது மத்திய மற்றும் மேற்கு வான்வெளியை சர்வதேச விமானங்களுக்காக மீண்டும் திறந்துள்ளதாக ஈரானிய வீதிகள் மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஈரானின் தெஹ்ரான் மற்றும் பிற பகுதிகளில் இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து ஜூன் 13 அன்று ஈரான் தனது வான்வெளியை மூடியது. 12 நாள் மோதலுக்குப் பிறகு, இரு தரப்பிற்கும் இடையே போர் நிறுத்தம் எட்டப்பட்டது.
இந்நிலையில் ஈரானிய சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பின் (CAO) ஒப்புதல் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளின் பாதுகாப்பு மதிப்பீடுகள் முடிந்ததைத் தொடர்ந்து வான்வெளியை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முன்பு , நாட்டின் கிழக்குப் பகுதி வான்வெளியை உள்நாட்டு, சர்வதேச மற்றும் கடந்து செல்லும் விமானங்களுக்காக ஈரான் திறந்துவிட்டது.
இருப்பினும், வடக்கு, தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் உள்ள ஈரானிய விமான நிலையங்களில் இருந்து எந்த விமானமும் தரையிறங்கவோ அல்லது புறப்படவோ அனுமதிக்கப்படவில்லை.
Monday, June 30, 2025
சர்வதேச விமானங்களுக்காக வான்வெளியை திறந்த ஈரான்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »