முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புதன்கிழமை (11) அன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) ஆஜராக உள்ளார்.
நாட்டிற்கு இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்வது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் புகார் அளித்திருந்தார்.
குறித்த புகார் தொடர்பாக வாக்குமூலம் அளிப்பதற்காகவே முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், முன்னாள் அரசாங்கத்தைச் சேர்ந்த பல அமைச்சர்கள் ஏற்கெனவே தொடர்புடைய விசாரணையின் ஒரு பகுதியாக வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.