3 மாதங்களுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளது
என கூறிவிட்டு எந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது ?3 மாதங்களுக்கு எரிபொருள் கையிருப்பு உள்ளது என கூறிவிட்டு எந்த விலை சூத்திரத்தின் அடிப்படையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டது ? என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஹிதாயத் சத்தார் கேள்வி எழுப்பினார்.
இன்று இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
ஈரான் இஸ்ரேல் மோதல் உக்கிரமடைந்த போது 3 மாதங்களுக்கு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக அரசு கூறிவிட்டு நேற்று எரிபொருள் விலையை அதிகரித்துள்ளது.3 மாதங்களுக்கு கையிருப்பில் உள்ள எரிபொருளுக்கு எந்த விலை சூத்திரத்தில் விலைகளை அதிகரித்தீர்கள் என நாம் அரசை கேட்கிறோம்.பொய் கூறி ஆட்சிக்கு வந்த அரசின் செயற்பாடு பொய்யிலேயே செல்கிறது என அவர் கூறினார்.