உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றிருந்தாலும்,
பல்வேறு காரணங்களால் சுமார் 50 உள்ளூராட்சி நிறுவனங்களின் அதிகாரங்கள் இன்னும் நிறுவப்படவில்லை என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் டொக்டர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.இதன் காரணமாக, அந்த சபைகளில் இன்னும் பொது சேவை நடவடிக்கைகளைத் தொடங்க முடியாத நிலையில் உள்ளன. சில உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானியில் வெளியிடப்படாதது, மேலும் சில இடங்களில் நீதிமன்ற உத்தரவுகள் இருந்ததாலேயும் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
மேலும், சபைக் கூட்டங்களில் மொத்த உறுப்பினர்களில் குறைந்தது 50% பேர் பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், சில உறுப்பினர்கள் வேண்டுமென்றே பங்கேற்காமல் இருந்ததால் நிர்வாகம் நிறுவப்பட முடியவில்லை என்றார்.
வனாதவில்லு பிரதேச சபையில், பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினை காரணமாக இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நிர்வாகம் நிறுவப்படாமல் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இருப்பினும், இந்த சபைகள் விரைவில் மக்களுக்காக செயல்படும் வகையில் நிறுவப்படும். இந்த தேர்தல்களில் 274 பிரதேச சபைகள், 27 நகர சபைகள், மற்றும் 36 நகர சபைகளுக்காக தேர்தல்கள் நடத்தப்பட்டன. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களைச் சேர்ந்த 8000 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான செலவு ரூ.110 கோடியை நெருங்கியது.
