இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்
(CPC) பழைய கடன்கள் முழுமையாக தீர்வடைந்ததும், எரிபொருள் ஒன்றுக்கு விதிக்கப்பட்டுள்ள ரூ.50 வரி நீக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.இன்று (ஜூலை 22) நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.
