Our Feeds


Thursday, July 24, 2025

Sri Lanka

வங்கி அட்டைகள் மூலம் (Bank Cards) பணம் செலுத்தும் போது கூடுதல் கட்டணம் வசூலிப்பது சட்டவிரோதம் - இலங்கை மத்திய வங்கி!


வாடிக்கையாளர்கள் Debit card அல்லது Credit card  ஊடாக பணம் செலுத்தும் போது, வியாபாரிகள் கூடுதல் கட்டணம் (உதாரணமாக 2.5%) வசூலிப்பது சட்டவிரோதம் என இலங்கை மத்திய வங்கி தெளிவுபடுத்தியுள்ளது.

வியாபாரிகள் கார்ட் இயந்திரத்தை பெறும் போது வங்கிகளுடன் கைச்சாத்திடும் ஒப்பந்தத்தின் கீழ், வாடிக்கையாளரிடம் எந்தவொரு கூடுதல் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

“பட்டியல் விலையைவிட அதிகமாக வியாபாரி பணம் கேட்டால், உடனடியாக அந்த வாடிக்கையாளர் தங்களது card ஐ வழங்கிய வங்கிக்கு புகார் அளிக்க வேண்டும்,”  என்றும் இலங்கை மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.

சில கடைகள் மற்றும் சேவை வழங்குநர்கள் card மூலம் பணம் செலுத்தும் போது கூடுதல் கட்டணங்களை வசூலிக்கிறார்கள் என்று வாடிக்கையாளர்கள் அதிகமான முறையில் புகார் கொடுத்துவரும் சூழலில் இத்தகவல் வெளியாகியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »