Our Feeds


Monday, July 28, 2025

SHAHNI RAMEES

ரஷ்யா-வடகொரியா இடையே நேரடி விமான சேவை ஆரம்பம்!

 

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரிய தலைநகர் பியாங்க்யாங் இடையே நேரடி விமான சேவை நேற்று (27) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 

 இந்த விமானம் வாரத்துக்கு 2 முறை இயங்கும் என ரஷ்ய விமான போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 இதேவேளை கடந்த மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரிய தலைநகர் பியாங்க்யாங் இடையே ரயில் சேவை தொடங்கப்பட்டது. ஆனால் இதன் பயண நேரம் சுமார் 10 நாட்கள் ஆகும். என்பதாலேயே இந்நேரடி விமான சேவையை தொடங்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது. 

 

ரஷ்ய – உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன. அதேபோல் ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா இராணுவ உதவியை வழங்கி வருகிறது. எனவே இரு நாடுகள் இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »