ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் ஈரான் தூதுவர் கலாநிதி அலி ரீஸா டெல்கொஷ் ஐ கொழும்பிலுள்ள அந் நாட்டுத் தூதரகத்தில் நேற்று (02) சந்தித்துள்ளார்.
இச்சந்திப்பில் இருநாட்டுக்குமான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தியதோடு, அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களில் உயிர்நீத்த ஈரான் தியாகிகளுக்கான அனுதாபங்களையும் பகிர்ந்து கொண்டனர்.