இலங்கைக்கு ஸ்டாரிலிங் செயற்கைக் கோள் இணையச் சேவையை வழங்கியமைக்காக டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க்குக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நன்றி தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஸ்டார்லிங் செயற்கைகோள் இணையச்சேவை நடைமுறைக்கு வந்திருப்பதாக எலோன் மஸ்க் புதன்கிழமை (02) உத்தியோகபூவர்வமாக அறிவித்தார்.
இச் சேவை வழங்கலுக்காக டெஸ்லா உரிமையாளர் எலோன் மஸ்க்குக்கு தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளப்பதிவின் ஊடாக நன்றி தெரிவித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையில் டிஜிட்டல் நிலைமாற்றத்தை நோக்கிய மிக முக்கிய நகர்வாக இது அமைந்திருப்பதாக சுட்டிக்காட்டினார்.
அத்தோடு, டிஜிட்டல் துறையில் இலங்கையின் எதிர்கால முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் குறித்து ஆராயும் வகையில் வெகுவிரைவில் மீண்டும் எலோன் மஸ்க்கை சந்திக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் நடைபெற்ற 10 ஆவது உலக நீர் உச்சி மாநாட்டில் ரணில் விக்ரமசிங்க மஸ்க்கை சந்தித்து, ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கான அனுமதி செயல்முறையை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.