தெரிவு செய்யப்பட்ட வாக்குறுதிகளை தொகுத்து அவற்றில்
ஒன்றை மாத்திரம் ஜனாதிபதி நிறைவேற்றியுள்ளார் என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு நியாயமானது. மக்களுக்கு வழங்கிய தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு அமைவாகவே செயற்படுகிறோம். கொள்கை மாதிரிக்கு புறம்பாக செயற்படவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது வெரிடேச் ரிசேர்ச் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
வழங்கப்பட்ட பல வாக்குறுதிகளில் தெரிவு செய்யப்பட்ட வாக்குறுதிகளை மாத்திரம் தொகுத்து அவற்றில் ஒரு வாக்குறுதி மாத்திரம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு நியாயமானது.
எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் குறிப்பிட்ட விடயங்களுக்கு அமைவாகவே நாங்கள் செயற்படுகிறோம்.கடந்த 09 காலப்பகுதியில் பலவிடயங்களை செயற்படுத்தியுள்ளோம். மக்களுக்கு வழங்கிய கொள்கை மாதிரிக்கு புறம்பாக நாங்கள் செயற்படவில்லை.
