அரசாங்கம் அறிமுகப்படுத்திய முன்னோடித் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் ஒன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் வாகனங்கள் சீட் பெல்ட் அணிவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கொட்டாவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு ஊடகங்களுக்கு உரையாற்றும்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தற்போது அபராதம் செலுத்துவது எளிதாக்கப்பட்டுள்ளது. இன்று அமைச்சரவை அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது, குருநாகல் முதல் அனுராதபுரம் வரை மட்டுமே தொலைபேசி மூலம் அபராதம் செலுத்த முடியும்.
இலங்கையில் உள்ள அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் இப்போது தொலைபேசிகளை வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு முதல், எங்கிருந்தும் அபராதம் செலுத்தலாம். சீட் பெல்ட் அணிந்து அபராதம் செலுத்தாமல் கவனமாக வாகனம் ஓட்ட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். கவனமாக வாகனம் ஓட்டுவதே எங்கள் கருப்பொருள். என தெரிவித்துள்ளார்.