கஜகஸ்தானில் நாட்டின் பாதுகாப்பைக் கருதி, இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூடும் வகையில் ஹிஜாப் போன்ற துணிகளைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இஸ்லாமிய பெண்கள் முகத்தை மூடும் வகையில், ஹிஜாப் உள்ளிட்டவை அணிவது, இஸ்லாம் மதத்தில் கட்டாயமில்லை.'அது வேண்டுமென்றே திணிக்கப்பட்டுள்ளது' என, கஜகஸ்தான் ஜனாதிபதி காஸிம் ஜோமார்ட் தோகாயேவ் ஏற்கனவே கூறியிருந்தார்.
இங்கு, பாடசாலைகளில் ஹிஜாப் அணிவதற்கு, 2017ல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது. அனைத்து பாடசாலைகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு, 2023ல் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தடைக்கு எதிராக இஸ்லாமியர்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு கருதி, பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் வகையில், கஜகஸ்தான் பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேறியுள்ளது. இது ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
Tuesday, July 1, 2025
ஹிஜாப் அணிய தடை - கஜகஸ்தான்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »