கனரக மற்றும் சிறிய ரக வாகனங்களின் சாரதிகள் அனைவரும் வீதிகளில் வாகனங்களை செலுத்தும் போது கட்டாயமாக இருக்கைப் பட்டையை (Seat belt) அணிந்திருத்தல் வேண்டும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் இடம்பெறும் வீதி விபத்துக்களை குறைப்பதற்காகவும் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காகவும் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இருக்கைப் பட்டையை அணிந்து வாகனங்களை செலுத்தும் போது வீதி விபத்துக்கள் ஏற்படுவதை குறைக்க முடியும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜூலை 01 ஆம் திகதி முதல் அனைத்து வாகனங்களின் சாரதிகளும் இந்த விதிமுறையை பின்பற்ற வேண்டும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதியிலிருந்து சிறிய ரக வாகனங்களின் பின் இருக்கைகளில் அமர்ந்திருக்கும் பயணிகள் அனைவரும் இருக்கைப் பட்டையை அணிய வேண்டும்.
இதேவேளை, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 01ஆம் திகதியிலிருந்து கனரக மற்றும் சிறிய ரக வாகனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டையை அணிய வேண்டும்.
நாட்டில் அதிகரிக்கும் வீதி விபத்துக்களை குறைப்பதற்காகவும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும் போக்குவரத்து அமைச்சினால் செயற்படுத்தப்பட்டுள்ள 85- திட்டத்தின் கீழ் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.