வனிந்து ஹசரங்க , ஒருநாள் சர்வதேச (ODI) வரலாற்றில் வேகமாக 100 விக்கெட்டுகள் மற்றும் 1000 ஓட்டங்கள் என்ற இரட்டைச் சாதனையை நிகழ்த்தி சாதனை புத்தகத்தில் தனது பெயரைப் பதித்துள்ளார்.
ஆர். பிரேமதாசா மைதானத்தில் நேற்று (5) பங்களாதேஷுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியின் போதே அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
65 போட்டிகளில் மட்டுமே இந்த மைல்கல்லை ஹசரங்க எட்டினார், 68 போட்டிகளில் இந்த மைல்கல்லை எட்டிய தென்னாபிரிக்காவின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் ஷான் பொல்லாக்கை முறியடித்தார்.
இந்த சாதனையின் மூலம், ஒருநாள் வரலாற்றில் 100 விக்கெட்டுகள்–1000 ஓட்டங்கள் என்ற பிரத்தியேக கிளப்பில் நுழைந்த 70வது வீரர் ஹசரங்கா ஆவார்.
தொடரின் முதல் ஒருநாள் போட்டியின் போது ஹசரங்கா ஏற்கனவே 1000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லைத் தாண்டியிருந்தாலும், இரண்டாவது போட்டியில் அவர் தனது 100வது ஒருநாள் விக்கெட்டை முடித்தார்.
Sunday, July 6, 2025
வனிந்து ஹசரங்க - புதிய உலக சாதனை!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »