Our Feeds


Saturday, July 19, 2025

SHAHNI RAMEES

செம்மணி புதைக்குழி, அனுர அரசுக்கு ஒரு அக்னி பரீட்சை!

 


செம்மணி புதைக்குழி, அனுர அரசுக்கு ஒரு அக்னி பரீட்சை

<கொழும்பு ஆர்ப்பாட்டத்தில் மனோ கணேசன்>


தோண்ட, தோண்ட வெட்டிச் சாய்க்க பட்ட அப்பாவி தமிழ் பெண்களின், குழந்தைகளின், பொது மக்களின் எலும்புக் கூடுகளை வெளி கொணரும் செம்மணி ஈழத்தமிழ் உடன் பிறப்புகள்  ஆண்டாண்டு காலமாக எதிர் கொண்டு வரும் அரச பயங்கர வாதத்தின் ஒரு அடையாளம். 


இது இன்று, இலங்கையர் அரசு என கூறி, ஆட்சிக்கு வந்திருக்கும் அனுர அரசுக்கு அக்னி பரீட்சை. இதை கடந்து தம்மை நிரூபிக்க வேண்டிய கடப்பாடு இந்த அரசு தலைவருக்கு இருக்கிறது. 


இது மட்டுமல்ல, தெற்கிலும் பல புதை குழிகள் இருப்பதாக ஆதாரங்கள் ஆங்காங்கே வெளி பட்டுள்ளன. அவற்றையும் ஆய்வு செய்து நீதியை நிலை நாட்டுங்கள். 


எங்களது நல்லாட்சியில் பல்வேறு காரியங்களை நாமும், வடகிழக்கு தமிழ் கட்சிகளும் நிர்ப்பந்தம் செய்து ஆரம்பித்தோம். 


ஐநா சபைக்கு கொண்டு போனோம். தீர்மானங்கள் நிறைவேற்றினோம். அரசியல் கைதிகளை கணிசமாக விடுவித்தோம். காணிகள் கணிசமாக விடுவித்தோம். காணாமல் போனோர் அலுவலகம், நஷ்ட ஈட்டு அலுவலகம், ஆகியவற்றை அமைத்தோம். யுத்த அவலத்துக்கு மூல காரணமான தேசிய இனப் பிரச்சினைக்கு "அதிகார

 பகிர்வு" தீர்வை தேடி, புதிய அரசியலமைப்பு பணியை செய்தோம். 


அனைத்தையும் நான்கு ஆண்டுகளில் செய்து முடிக்க முடியவில்லை. முடியாது. ஆனால் நாம் நல்ல ஆரம்பத்தை தந்தோம். 


நாம் ஆரம்பித்த இந்த பணிகளை அப்படியே முன்னே கொண்டு செல்ல வேண்டியதே இந்த அரசின் கடமை. முதலிப் காணாமல் போனோர்  அலுவலக அதிகாரிகளை அங்கே அனுப்புங்கள். அதை செய்யுங்கள் என நான் அனுர குமார திசாநாயக்கவை நான் கோருகிறேன்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »