கொழும்பில் முச்சக்கரவண்டி மற்றும் கார் ஒன்றுக்கிடையில் ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் 17ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றதாகத் தெரியவந்துள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர், புலத்சிங்கள மில்லகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பிரியதர்ஷினி என்ற பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர் பிரியதர்ஷினியின் உடல் தற்போது அவரது மில்லகந்த இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
