Our Feeds


Saturday, July 12, 2025

SHAHNI RAMEES

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக எரிக்!

 

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மெயர் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 



அமெரிக்க ஜனாதிபதியால் இவரது பெயர் செனட் சபையில் முன்மொழியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 



இவர் வெளிநாட்டுத் சேவையின் (Senior Foreign Service) சிரேஷ்ட இராஜதந்திரியாக செயற்பட்டுள்ளார்.



தற்போது, இவர் தென் மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான (Bureau of South and Central Asian Affairs) சிரேஷ்ட அதிகாரியாக இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை, மாலைத்தீவு உள்ளிட்ட 13 நாடுகளில் நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும், பணியகங்களை மேற்பார்வையிடுவதற்கும் பொறுப்பாளராக செயற்படுகிறார். 



முன்னதாக நோர்வே, வட மாசிடோனியா, கசகஸ்தான், கம்போடியா ஆகிய நாடுகளில் பல்வேறு உயர் பதவிகளில் பணியாற்றியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »