மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தின் ( MRIA) செயற்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்புக்களை மேம்படுத்துவதற்காக, தனியார் துறையிடமிருந்து புதிய முதலீடுகளை அழைக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த செயன்முறையை மேம்படுத்தவும், பயன்படுத்தப்படாத வசதிக்கு புதிய முதலீட்டாளர்களை பெறுவதற்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் ருவான் கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
முன்னதாக விமான நிலைய நடவடிக்கைகளை ரஷ்யா - இந்தியா கூட்டு முயற்சிக்கு மாற்றுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
அமெரிக்கத் தடைகளுக்கு ஒரு தரப்பினர் உட்பட்டதனால் தேசிய வான்வெளியின் இறையாண்மை குறித்து எழுந்த பிரச்சினை காரணமாக குறித்த ஒப்பந்தத்தில் இருந்து அமைச்சு விலகியது.
புதிய முதலீட்டு அழைப்பின் மூலம் பெறப்பட்ட அனைத்து திட்டங்களையும் அரசாங்கம் கவனமாக மதிப்பாய்வு செய்ததன் பின்னர் விமான நிலையத்தை புதுபிப்பதற்கான முதலீட்டாளர்களை தேர்ந்தெடுக்கும் என பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.
Friday, July 25, 2025
மத்தள விமான நிலைய மேம்படுத்தல் - தனியார் முதலீட்டாளர்களுக்கு வாய்ப்பு!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
