Our Feeds


Friday, July 25, 2025

Sri Lanka

வசந்த சமரசிங்க, மஹிந்த ஜெயசிங்க, ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு!


போலி ஆவணங்களை தயாரித்து சொத்துக்களை குத்தகை அடிப்படையில் வழங்கி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் கடுவலை மாநகர சபையின் மேயர் ரஞ்சன் ஜெயலால் ஆகியோரிடமிருந்து வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு கொழும்பு மோசடி விசாரணை பணியகத்திற்கு கல்கிஸ்ஸை நீதவான் ஏ.டி. சத்துரிகா த சில்வா இன்று வெள்ளிக்கிழமை (25) உத்தரவிட்டுள்ளார்.


பிரதிவாதிகள் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணவர்தன, இந்த வழக்குடன் தொடர்புடைய 35 ஆவணங்களை நீதிமன்றில் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து இந்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »