இலஞ்சம் பெற்ற பயாகலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரியொருவர் நேற்று (09) இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொலிஸ் அதிகாரி போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக 2 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளார்.
குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 20 ஆயிரம் ரூபா பணத்தை முதலில் பெற்றுக்கொண்டுள்ள நிலையில் மீதி 180,000 ரூபா பணத்தை பெற்றுக்கொள்வதற்காக சென்றிருந்தபோது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
