Our Feeds


Thursday, July 17, 2025

Zameera

அமெரிக்காவில் நிலநடுக்கம்


 அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிச்டர் அளவில் 7.3 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பீதியடைந்தனர்.


உள்ளூர் நேரப்படி 12.37 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.


பசிபிக் கடல் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்கா மாகாணம் நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படக்கூடிய ரிங்க் ஒப் பயர் என்ற இடத்தில் அமைந்து இருப்பதால் அடிக்கடி இங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கம்.


எனினும், சமீப காலமாக சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவது மக்களை பீதி அடையவைத்திருக்கிறது. கடந்த 1964 ஆம் ஆண்டு ரிச்டர் அளவில் 9.2 என்ற அளவுக்கு நிலநடுக்கம் அலாஸ்காவில் ஏற்பட்டது.


அமெரிக்க வரலாற்றில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கமாக இது அமைந்தது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலாஸ்காவின் வளைகுடா மற்றும் ஹவாய், அமெரிக்க மேற்கு கடற்கரை பகுதிகளை சுனாமி தாக்கியமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »