Our Feeds


Tuesday, July 8, 2025

SHAHNI RAMEES

இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும் தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன்!- கனடா பிரதமர்

 

இனப்படுகொலை காரணமாக கனடாவில் வாழும்  தமிழ் மக்கள் சுமக்கும் பேரழிவை நான் புரிந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் மார்க் கார்னி தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் கனடா தமிழர்களிற்கும் பொதுபாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கும் எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவெறி பிரச்சாரங்களை தொடர்ந்து கனடா பிரதமர் கனடா தமிழர்களிற்கான தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

கனடிய தமிழர்களின் தேசிய அவைக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் தமிழ் கனடியர்கள் சுமக்கும் நீடித்த வலி மற்றும் பேரதிர்ச்சியை நான் உணர்ந்துகொள்கின்றேன் என கனடா பிரதமர் தெரிவித்துள்ளார்.


கனடா தமிழர்கள் தாங்கள் எதிர்கொண்ட இனப்படுகொலை காரணமாக எதிர்கொண்டுள்ள வலி இழப்பு பேரழிவு ஆகியவற்றை நான் புரிந்துகொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »