பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக கைது செய்யப்பட்ட கிரேன் வாகனத்தின் சாரதி கஞ்சா உட்கொண்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது இது தெரியவந்தது.
குறித்த விபத்தில் காயமடைந்த 7 பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போதே உயிரிழந்ததாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் இருவர் பெண்கள் என்றும், ஏனைய 5 பேர் ஆண்கள் என்றும் வைத்தியர் குறிப்பிட்டார்.
ராஜகிரியவிலிருந்து பௌத்தலோக மாவத்தை நோக்கிச் சென்ற கிரேன் ஒன்று, பொரளை மயான சுற்றுவட்டத்தில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை அருகில் நிறுத்தப்பட்டிருந்த 6 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 3 கார்கள் மீது மோதியுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் ஆவார்.
விபத்துக்கு காரணமான கிரேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, கிரேன் வாகனத்தில் பிரேக் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர்.
Monday, July 28, 2025
பொரளை விபத்து - சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்!
Next
« Prev Post
« Prev Post
Previous
Next Post »
Next Post »
