Our Feeds


Thursday, July 24, 2025

Admin

புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று!


முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (24) இடம்பெற உள்ளது. 

இந்த விவாதம் இன்று மாலை 5.30 மணி வரை நடைபெறும் என்று பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுக் கூட்டத்தில் குறித்த விவாதத்தை நடத்த முன்மொழியப்பட்டது. 

இலங்கை மின்சாரத் திருத்தச் சட்டமூலம் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று நடத்த திட்டமிடப்பட்டிருந்தது, எனினும் சட்டமூலம் தொடர்பான தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக குறித்த விவாதத்தை எதிர்காலத்தில் நடத்த பாராளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »