ரஸ்யாவில் இடம்பெற்ற விமானவிபத்தில் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது.
அன்டோனோவ் யுn-24 ரக விமானம் கபரோவ்ஸ்கில் இருந்து பிளாகோவெஷ்சென்ஸ்க் மற்றும் டைன்டாவிற்கு பயணித்துக்கொண்டிருந்தபோது ராடரிலிருந்து காணாமல் போனதாக ரஷ்ய அவசரகால சூழ்நிலைகள் அமைச்சகம் டெலிகிராமில் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
டைன்டாவிலிருந்து 10 மைல் (16 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள ஒரு மலைச் சரிவில் விமானத்தின் இடிபாடுகளை ஒரு தேடல் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர் கண்டதாக அமுர் சிவில் பாதுகாப்பு மற்றும் தீயணைப்பு பாதுகாப்பு மையம் டெலிகிராமில் தெரிவித்துள்ளது. உயிர்பிழைத்தவர்கள் எவரும் இல்லை என அவரசகால சூழ்நிலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
டின்டா விமான நிலைய இயக்குநரின் கூற்றுப்படி விமானம் விபத்துக்குள்ளான பிறகு தீப்பிடித்தது.
விமானம் ஏன் தொடர்பை இழந்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது மேலும் மாநிலங்களுக்கு இடையேயான விமானப் போக்குவரத்துக் குழு விசாரணையைத் தொடங்கியது.
