இலங்கைக்கு இதுவரை மொத்தம் 1.74 பில்லியன் அமெரிக்க டொலர்களை சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ளதாக நிதிக் கொள்கைத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கபில சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கோரிய கடன் வசதி ஒன்பது தவணைகளாக வழங்கப்படும் எனவும், அதில் ஐந்து ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கொண்ட ஐந்தாவது தவணை ஜூலை 3 ஆம் திகதியன்று பெறப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
