கேரளக் கடல் பகுதியில் தீப்பிடித்து மூழ்கிய MSC Elsa 3 என்ற கப்பலின் உரிமையாளர்கள், இலங்கையின் கடல் மற்றும் கடலோர சூழலுக்கு ஏற்பட்ட சேதத்திற்கு இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
லைபீரியக் கொடியுடன் கூடிய கப்பல் மே 25ஆம் திகதியன்று 643 கொள்கலன்களை ஏற்றிச் சென்றபோது கேரளக் கடல் பகுதியில் தீப்பிடித்து மூழ்கியது.
குறித்த கப்பல் நிறுவனம் மற்றும் அதன் காப்பீட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் இழப்பீட்டு செயல்முறை குறித்து விவாதிப்பதற்கு கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினரை சந்தித்துள்ளதாக அதன் தலைவர் சமந்த குணசேகர தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடல் மற்றும் கடலோர சூழலுக்கு ஏற்பட்ட சேதம் குறித்த மதிப்பீடு தற்போது நடைபெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
இதற்கிடையில், இச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட கடலோர பகுதிகளில் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் தொடர்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.
