முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை செய்ய முடியாமைக்கு காரணம் உலமா சபையினர் தான். நான் நீதி அமைச்சராக இருக்கும் போது உலமா சபையின் முக்கிய 85 உறுப்பினர்களை அழைத்து ஒவ்வொன்றாக பேசினேன்.
ஷரீஆவின் அடிப்படைக்கு மாற்றமில்லாத வகையில் சில மாற்றங்கள் நடக்க வேண்டும். காலத்தோடு இந்த மாற்றங்கள் வர வேண்டும்.
100 ஆண்டுகளுக்கு முன் 2 சதவீத முஸ்லிம் பெண்கள் கூட பல்கலைக் கழகம் சென்று படிக்கவில்லை. ஆனால் இன்று 60 வீதமான முஸ்லிம் பெண்கள் பல்கலைக் கழகம் நுழைகிறார்கள். அவர்களின் கல்வியுடன் அவர்களுக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.
உளத் தூய்மையில்லாத தொழுகையில் எப்படி நன்மையில்லையோ, அது போல் தான் நீதி கிடைக்காத சட்டத்தினால் எந்த பலனும் இல்லை.
உலகம் முழுவதும் பெண்களை காதிகளாக ஏற்றுக் கொள்ளும் போது ஏன் உங்களால் மாத்திரம் ஏற்றுக் கொள்ள முடியாது என நான் உலமா சபை ஆலிம்களிடமே கேட்டேன். அவர்கள் அனைவரும் ஆண்கள். ஆண்கள் என்ற இடத்திலிருந்தே பார்க்கிறார்கள். பெண்களை பற்றிய அவர்களின் பார்வை வித்தியாசமாக இருக்கிறது.
கஷ்டப்படும் பெண்களுக்கு நீங்கள் கொடுக்கும் நியாயம் என்ன? உங்கள் குடும்பத்தில், உங்கள் சகோதரிக்கு ஒரு அநியாயம் நடந்தால் தான் உங்களுக்கு இது புரியும்.
