நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் 5,117 கண் தானங்கள் பதிவாகியுள்ளதாக இலங்கை கண் தான சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையைச் சேர்ந்த 1,144 நோயாளர்களுக்கும் 3,973 வெளிநாட்டு நோயாளர்களுக்கும் இவ்வாறு கண் தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் சம்பத் டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, இதுவரையில் 98,295 வெளிநாட்டு நோயாளர்களுக்கு, 58,635 இலங்கை நோயாளர்களுக்கு கண் தான சத்திர சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நடப்பாண்டின் முதல் எட்டு மாதங்களில் கண் மாற்று சத்திரசிகிச்சைகளுக்காக 592 திசுக்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் இதுவரையில் அறுவை சிகிச்சைக்காக மொத்தம் 18,326 திசுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் இதுவரை திட்டமிட்ட 1,200 இலவச கிகிச்சைகளில் 900 சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கண் தான சங்கம் சுட்டிக்காட்டியுள்ளதுடன் மேலும் மொத்தமாக 14,000 கண்ணாடிகளும் இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
