Our Feeds


Friday, August 22, 2025

Admin

தென் அமெரிக்காவில் 7.5 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு!


தென் அமெரிக்காவில் இன்று 7.5 மெக்னிடியூட் அளவிலான வலுவான நில அதிர்வு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதிகாரிகள் ஆழிப்பேரலை அபாயத்தை மதிப்பிட்டு வருகின்றனர்.

தென் அமெரிக்காவின் தெற்கு முனைக்கும் அண்டார்டிகாவிற்கும் இடையில் அமைந்துள்ள நீர் நிலையான டிரேக் கடல் பெருவழியில் நில அதிர்வு ஏற்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னதாக, நில அதிர்வு 8.0 மெக்னிடியூட் அளவில் பதிவானது, ஆனால் பின்னர் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் அதை 7.5 ஆகக் குறைத்தது.

சேதம் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை இல்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதன்கிழமை மாலை பேஸ் ஃப்ரீயிலிருந்து வடமேற்கே 258 கிலோ மீற்றர் (160 மைல்) தொலைவில் ஏற்பட்ட 8.0 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வைத் தொடர்ந்து, சிலியின் கடற்படை நீர்வரைவியல் மற்றும் கடல்சார் சேவை சிலி அண்டார்டிக் பிரதேசத்திற்கு ஆழிப்பேரலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வெளியிட்டதாக ஒரு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »