Our Feeds


Sunday, August 24, 2025

Zameera

மருந்துகளுக்கு பற்றாக்குறை - சுகாதார அமைச்சர்


 கடந்த அரசாங்கத்தில் முறையான விலைமனுக்கோரல் முறைக்கு வெளியே மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டதால், நாட்டில் தற்போது சில மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கூறியுள்ளார். 


இது தொடர்பில் அவர் கூறுகையில் ,


கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் இல்லாததன் விளைவாகவே சில மருந்து களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு விலைமனுக்கோரல் விடப்பட்டிருந்தால், மருந்துகள் சரியாக வந்திருக்கும். அடுத்த ஆண்டுக்கு விலைமனுக்கோரல் விட்டுள்ளோம். 


தற்போதைய மருந்து பற்றாக்குறையை சமாளிக்க, பிராந்திய கொள்முதல்களுக்காக வைத்தியசாலைகளுக்கு ரூ. 3,500 மில்லியன் ஒதுக்கியுள்ளோம். 


 இரண்டாவது, அவ்வப்போது சில நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மருந்துகளை நன்கொடையாகப் பெறுகிறோம். சில நாடுகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிலையை அடைந்துவிட்டோம், எனவே இந்தப் பிரச்சினையை நாம் எதிர்கொள்ள முடியும்." என்று கூறியுள்ளார். 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »