Our Feeds


Sunday, August 24, 2025

Zameera

எதிர்க்கட்சித் தலைவர் இல்லாத எதிர்க்கட்சிகள் கூட்டு செய்தியாளர் சந்திப்பு


 எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டு செய்தியாளர் சந்திப்பொன்று கொழும்பில் உள்ள அமரி ஹோட்டலில் சற்றுமுன் இடம்பெற்றிருந்தது. 


இதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சிறையில் இருந்து விடுவிக்க அனைத்துக் கட்சிகளும் போராடி வருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


மேலும், இலங்கையில் ஜனநாயம் குறித்து தாம் வருத்தம் அடைவதாகவும் குழிதோண்டி புதைக்கபட்ட ஜனநாயத்தால் இனி நாட்டை கட்டியெழுப்ப முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 


இது நாம் அனைவரும் ஒன்று படவேண்டிய தருணம். அரசியல் கட்சி, கட்சியின் நிறங்கள் என எம்மை நாம் வேறுபடுத்தி பார்க்காது, ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். நாம் இணைந்து இந்த நாட்டில் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் அவர் தெரிவித்ததார். 


எதிர்கட்சிகள் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் ஸ்ரீபால டி சில்வா, ஜீஎல் பீரிஸ் உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்கள் பங்கேற்ற போதிலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »