Our Feeds


Friday, August 29, 2025

Zameera

யாழில் கையெழுத்துப் போராட்டம்

 

யாழ். செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச விசாரணை கோரியும், புதைகுழி அகழ்வுப் பணிகளைச் சர்வதேச நிபுணத்துவப் பங்களிப்புடன் முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும் தமிழர் வாழ் பகுதிகளில் இன்று கையெழுத்துப் போராட்டம் ஆரம்பமாகுகின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றிணைந்து இந்தக் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளன.

தமிழர் தாயகமெங்கும் முன்னெடுக்கப்படவுள்ள இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில் தமிழ் மக்கள் அனைவரும் பங்கேற்று தமது ஒப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »